பொது போக்குவரத்து பயணத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:  அமெரிக்காவில் விமானம் மற்றும் பிற பயணங்களின்போது பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டயாமில்லை என்று புளோரிடா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முழுவதுமாக குறையவில்லை. இந்நிலையில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணத்தில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்று அமெரிக்க  நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டித்து ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் கட்டாய முககவசத்துக்கு ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய புளோரிடா பெடரல் நீதிபதி கேத்ரின் கிம்பால் மிசெல்லா, விமானம் மற்றும் பிற பயணங்களின்போது முககவசம் அணிவதற்கான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையத்தின் ஆணையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு நீதிமன்றங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் பொது போக்குவரத்து பயணத்தில் முககவசம் அணிய வேண்டுமென கட்டாயப்படுத்த நோய் தடுப்பு ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.மேலும்  முககவசம் அணிவது பயணிகளின் விருப்பம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன், டல்லாஸ் மற்றும் மிக அதிக பயணிகளை கையாளும் லாஸ் ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையமும் முககவசம் கட்டாயம் என்ற தங்களது விதிமுறையை தளர்த்தியுள்ளன. இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘‘நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவு ஏமாற்றம் தரக்கூடியதாக உள்ளது’’ என்றார். …

Related posts

கொலை முயற்சி நடந்த பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு

பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி: பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்