பொது கழிப்பறை வசதி வேண்டும்: பக்தர்கள் வேண்டுகோள்

 

ஆர்.எஸ்.மங்கலம். டிச.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உப்பூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொ துகழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிராமத்தில் வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது.

இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்கின்றனர். இதுபோல வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம், தேவிபட்டிணம், சேதுக்கரை போன்ற ஊர்களுக்கு செல்லும் பக்தர்களுமே நம்பிக்கையுடன் சகல வெற்றியையும் தரும் இந்த திருத்தலம் வந்து வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவ்வளவு சிறப்புமிக்க ஆலயம் கிழக்கு கடற்கரை சாலையில் கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பூரில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர்,வெளி மாவட்ட மக்கள் ஏராளமானோர் வந்து செல்லக் கூடிய இவ்வூரில் கழிப்பறை வசதியின்றி மிகுந்த கஷ்டப்படுகின்றார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் ஆலயத்தின் பின்புற பக்கவாட்டில் கழிவறை அமைப்பதாக கூறி பில்லர் எழுப்பி செய்து விட்டனர். இன்று வரை அது காட்சி பொருளாகவே உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்