பொதுமக்கள், வாகன ஓட்டிகளை ஓடஓட விரட்டிய மக்னா யானை : பந்தலூர் அருகே பரபரப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மக்னா யானையால் மக்னா யானை ஓடஓட துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் சேரம்பாடி டேன்டீ பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத்தோட்டம் பகுதியில் சுற்றித்திரிகிறது. இதனால் தோட்டத்தொழிலளார்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சேரங்கோடு பகுதியில் ஒரு மக்னா யானையும் குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டம் பகுதியில் மிகவும் ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டுகிறது. இதனால் மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை மக்னா யானை அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை விரட்டியது. இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பியுள்ளனர். ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் மக்னா யானையால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது கும்கி யானை வரவழைத்து மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு – ஐகோர்ட் உத்தரவு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வலியுறுத்தல்

கேர்மாளம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்