பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் ஜிஹெச்சுக்கு 3 மருத்துவர்கள் நியமனம்

 

சாத்தான்குளம், ஜூலை 10: பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக 3 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை, சுற்றுவட்டார 24 கிராம பஞ்சாயத்து மக்களுக்கும் தலைமை மருத்துவமனையாகத் திகழ்கிறது. இம்மருத்துவமனைக்கு 5 மருத்துவர்கள் பணியிடங்கள் உள்ளபோதும் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், மேலும் ஏராளமான செவிலியர்கள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்து வந்ததாக புகார் தெரிவித்த பொதுமக்கள், உடனடியாக தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என தொடர்நது கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, வட்டார மனிநேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகாபால்துரை மற்றும் சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜிடம் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் அவரது பரிந்துரையை ஏற்று தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு 2 பயிற்சி மருத்துவர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதன்மை குடிமை மருத்துவராக பணிபுரிந்து வரும் டாக்டர் சிவகாமியை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் மகப்பேறு சிகிச்சைக்காக சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் சாத்தான்குளம் அரசு தலைமை மருத்துவர் இந்த 3 மருத்துவர்களும் தவறாமல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்கிறார்களா? என சாத்தான்குளம் தலைமை மருத்துவர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குனர், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் மகப்பேறு மருத்துவர் மற்றும் கூடுதல் மருத்துவர்கள், தேவையான செவிலியர்கள், பணியாளர்கள் நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை