பொதுமக்கள் எதிர்பார்ப்பு கடந்த 3 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தாந்தோணிமலை குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர்

 

கருர், மே 27: கரூர் தாந்தோணிமலை பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தாந்தோணிமலை இடையே வெங்கடேஷ்வரா நகர் பகுதியை ஒட்டி எதிர்ப்புறம் பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் தாழ்வான பகுதிகள் என்பதால், மழைக்காலஙகளில அதிகளவு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரூர் மாநகர பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இதுநாள் வரை வடியாமல் உள்ளது.

இந்த பகுதியில் பரந்து விரிந்து குளம் போலவே மழைநீர் அதிகளவு தேங்கியுள்ளது. இதுநாள் வரை தண்ணீர் வடியாத காரணத்தினால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சவால் விடும் வகையில் இந்த தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக, இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தேங்கியுள்ள இந்த மழைநீரை இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி