பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் வகையில் வீடு வீடாக டோக்கன் விநியோகம்: நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை வரும் 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளனர். இந்தாண்டு, பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2.19 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.2429 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி நேற்று காலை தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும்டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பில் குறைகள் இருந்தால் தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்