பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவது தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவது தொடர்பாக நாளை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கவர்னர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக 1,000 ரூபாயை வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. இதை வழங்குவதற்கான நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை கூட இருக்கும் தேதி, கவா்னர் உரையில் இடம் பெறும் கருத்துகள் ஆகியவை பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்