பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் 6 இடங்களில் பிரம்மாண்ட கலை விழா

சென்னை: சட்டப்பேரவையில் கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளை 75 ஒளிப்படங்களாக (வீடியோ) தயாரித்து இணையவழியில் வெளியிடப்படும். இதற்காக, ரூ.164 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக பாரம்பரிய கலைகள் இடம் பெறும் வகையில் தமிழர் திருநாளானா பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் 6 இடங்களில் பிரம்மாண்ட கலை விழா (இணையவழி மூலம்) மூன்று நாட்கள் நடத்தப்படும். இதற்கென ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தேசிய கலைக்கூடத்தின் மேல் லேசர் 3டி ஒலி ஒளி காட்சியமைத்து, தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல்கள் அடங்கிய கண்கவர் நிகழ்ச்சிகள் ரூ.8 கோடியில் நடத்தப்படும்.* சோழப் பேரரசின் மரபு மற்றும் தொன்மையை விளக்கும் அன்பில் செப்பேடுகளை கண்டுணர்ந்து சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். * தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பராம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் லெய்டன் செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப கொண்டு வர சீரிய முயற்சிகள் எடுக்கப்படும். மறு சீரமைக்கப்பட்ட தொல்லியல் நிறுவனத்தில் புதியதாக  கல்வெட்டியலில் ஈராண்டு முதுநிலை பட்டய வகுப்பு தொடங்கப்படும். தமிழ்நாட்டில் புதிதாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி  மாவட்டம் துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெருமாலை ஆகிய 3 இடங்கள் உட்பட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். * தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீரமைக்கப்படும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்