பொங்கல் பண்டிகைக்காக 17,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 42  வழித்தடங்களில்  நிறுத்தப்பட்ட பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீண்டும் துவங்கி வைத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு,  சிறு, குறு, நடுத்தர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு, பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், ‘‘பொங்கல் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் சிரமமின்றியும், எந்தவித இடையூறும் இன்றி சொந்த ஊர்களுக்கு  சென்று வர, 17,000  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நான்காயிரம் பேருந்துகளை, மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  போக்குவரத்து துறையில், 6000 பேர் புதிதாக பணி நியமனம் செய்ய உள்ளோம். போக்குவரத்து துறைக்கு புதிதாக 2212 பேருந்துகள் வாங்குவதற்கு அரசிடம் நிதி கேட்டு உள்ளோம். விரைவில் அவை வாங்கப்படும். செங்கல்பட்டு நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள போக்குவரத்து பணிமனையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!