பொங்கலூர் பகுதிகளில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே அழுகி வீணாகும் தக்காளி: நிவாரணம் வழங்க கோரிக்கை

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.5க்கு சரிந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`தற்போது அறுவடை காலம் துவங்கி விட்டதால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை மூலதனம் செய்து செடிகளை நட்டு, களை எடுத்து, மருந்து தெளித்து, ஆட்கூலி கொடுத்து அறுவடை செய்வதற்காக காத்திருந்த விவசாயிகளான தங்களுக்கு இடி விழுந்ததுபோல் உள்ளது. தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகிறோம். மேலும், செடியிலேயே தக்காளியை பறிக்கமால் அழுகி வீணாகியுள்ளன. எனவே, தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் இப்பகுதிகளில் ஆய்வு செய்து  கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்….

Related posts

மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்