பைனான்சியருக்கு கொலை மிரட்டல்; ஊராட்சி தலைவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பைனான்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளுவர் அடுத்த தாமரைப்பாக்கம், பெரியபாளையம் சாலையை சேர்ந்தவர் ஜோதி (33). இவர், ஜே.பி.ஸ்டோர் ஏஜென்சிஸ் என்ற பெயரில் சிட் பண்ட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். அதில், சத்தியமூர்த்தி என்பவருக்கு ரூ.8.25 கோடி கடனாக ஜோதி கொடுத்துள்ளார். இதில், பணத்தை திருப்பி தருவதில், சத்தியமூர்த்திக்கும், ஜோதிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி, வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரிடம் நடந்ததை கூறி, என்னால் பணம் தரமுடியாது. எனவே, ஜோதியிடம் பேசி பிரச்னையை தீர்த்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த மாதம் வளர்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஜோதியை வரவழைத்து, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், சத்தியமூர்த்தியிடம் பணத்தை கேட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜோதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்