சென்னை: தி.நகர் சிவசைலம் தெருவை சேர்ந்த பிமல் (40), பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது பைக் ஷோரூமில் விற்பனை பிரிவு மேலாளராக உள்ள முகமது காசிம் (47), உதிரிபாகம் பிரிவு பொறுப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, எனக்கு தெரியாமல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து அந்த ஷோரூமின் வாகன பிரிவு மேலாளர் முகமது காசிம், மற்றும் உதிரிபாகம் பிரிவு பொறுப்பாளர் மகேஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….