பைக் திருடிய வாலிபர் கைது

ஆவடி: அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஐயப்பன்(33). இவர், தனது நண்பருடைய பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்பன் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் எழுந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த பைக் மாயமாகி இருந்தது. மேலும், அவரது பைக்கை மர்ம நபர் நள்ளிரவு திருடி சென்றிருப்பது கண்காணிப்பு கேமரா மூலமாக தெரியவந்தது. இதுகுறித்து, ஐயப்பன், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீசார் தனிப்படை அமைத்து  தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று தனிப்படை போலீசார் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடங்கி பிடித்தனர். தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். மேலும், அவரிடம் பைக்கிற்கு உரிய எந்த ஆவணமும் இல்லை. இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில்  திருவேற்காடு, தேவி நகரை சேர்ந்த மணிகண்டன்(20) என்பதும், அவர் தான் ஐயப்பன் பைக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த பைக் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் மணிகண்டனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பிறகு, நீதிபதி உத்தரவின் பேரில் அவர் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதேபோல், ஆவடி ராஜ்பாய்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாம்சரண்(22). பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாம்சரன் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, அங்கிருந்த பைக் மாயமாகி இருந்தது. …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு