பைக் திருடிய வாலிபர் கைது

 

அன்னூர், ஜூன் 7: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி பகத் (30). இவர், அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள பழைய தபால் அலுவலகம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த முகமது அலி பகத், தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலையில் வந்து பார்த்த போது பைக் திருடு போயிருந்தது.

இது குறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வந்த நிலையில் நேற்று கோவை சாலையில் எஸ்ஐ விக்னேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் கோவை தடாகம் பகுதியை அடுத்துள்ள கணுவாய் காமராஜ் நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் மஜ்கர் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், முகமது அலி பகத்தின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்