பைக்குகள் திருடிய வாலிபர் சிக்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளில் கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். ஒரு சிலர் சாவியை வாகனத்திலேயே விட்டு, விட்டு சிறிது நேரத்தில் வந்து மீண்டும் எடுத்துச் செல்வதுண்டு. இதைப் பயன்படுத்தி  இருசக்கர வாகனங்களை  நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் கடைகளுக்கோ, அலுவலகங்களுக்கோ, உணவகத்திற்கோ சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது அது மாயமாவதாக திருவள்ளூர் நகர போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள உணவகம் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். இதில் திருவள்ளூர் பத்தியால்பேட்டையைச் சேர்ந்த மோகன்(21) என தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்று அவரிடம் விசாரித்தபோது கஞ்சா போதையில் இருந்ததால் அவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த நகர போலீசார் அவரை கைது செய்தனர்….

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்