பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பரமத்திவேலூர், ஜூலை 3: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொன்மலர்பாளையம் கோமந்துறை காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வேலூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார், பொன்மலர்பாளையம் கோமந்துறை காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாலை அவ்வழியாக பைக்கில் மூட்டைகளை ஏற்றி வந்த பொன்மலர்பாளையத்தை தனபால் (41) என்பவரை நிறுத்தி சோதனையிட்ட போது, மணலை மூட்டையாக கட்டி கடத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related posts

மண்பாண்டங்கள் செய்ய களிமண் எடுக்க அனுமதி

ஆதிதிராவிடநலப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணி

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்