பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை பழுது-வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணை மற்றும் படகு இல்லம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பைக்காரா அணை உள்ளது. இந்த அணையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு இல்லம் அமைக்கப்பட்டு படகு சவாரி மேற்க்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இங்கு மட்டுமே ஸ்பீடு போட்டுக்கள் இயக்கப்படுகின்றன. இதில், சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக செல்கின்றனர். கூடலூரில் இருந்து ஊட்டி வரும் வழியில் இந்த பைக்காரா அணை உள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று விட்டு திரும்புகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறை மற்றும் ஏதேனும் தொடர் விடுமுறை நாட்கள் வந்தால், ைபக்காரா அணை சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டுகிறது. இந்த அணைக்கு ெசல்ல வேண்டுமானால் ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் வனப்பகுதிகளின் வழியாக செல்ல வேண்டும். இச்சாலை நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, சாலையின் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில்  மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில், பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரு சக்கர வாகனங்களில் ெசல்லும் சுற்றுலா பயணிகள் பலர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பைக்காரா அணைக்கு செல்ல வனத்துறை மூலம் நுழைவு கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இச்சாலையை ஆண்டு தோறும் பழுது பார்க்க அல்லது சீரமைக்க வனத்துறை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்வதில்லை. மேலும், சாலை சீரமைப்பு பணிகளை சுற்றுலா துறையிடமும் வழங்குவதில்லை.இதனால், சாலை நாளுக்கு நாள் பழுதடைந்துக் கொண்டே செல்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை