பேஸ்புக் பழக்கத்தால் கணவரை உதறிவிட்டு வந்த சென்னை கள்ளக்காதலி கழுத்து நெரித்து கொலை: கள்ளக்காதலன் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குருக்கை ஊராட்சி கே.ேக. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(36), லாரி டிரைவர். இவரது மனைவி உமா என்கிற மலர்(30). இவர்களுக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி நதியா(30). இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தங்கராஜிக்கும், நதியாவுக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு பேசி வந்துள்ளனர். தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு செல்லும்போது நதியாவை சந்தித்து பேசி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இதையறிந்த பார்த்தசாரதி, மனைவி நதியாவை கண்டித்துள்ளார். ஆனால் நதியா கள்ளக்காதலை கைவிட மறுத்துவிட்டாராம். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருப்பினும் நதியா, தங்கராஜை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நேற்று மீண்டும் இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த நதியா, கணவர் மற்றும் 2மகன்களை உதறிவிட்டு கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கராஜிடம், ‘எனது கணவர், மகன்களை விட்டுவிட்டு வந்துவிட்டேன். இனிமேல் உன்னோடுதான் வாழ்வேன்’ என கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி உமா இருவரையும் கண்டித்து தகராறு செய்துள்ளார். பின்னர் இருவரையும் வீட்டிற்குள் சேர்க்காமல் கதவை பூட்டிக்கொண்டாராம்.இதையடுத்து நேற்று மாலை தங்கராஜ், நதியாவை கண்ணக்குருக்கை அடுத்த பெரியகோளாப்பாடியில் உள்ள ஒரு மலைக்குன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நதியாவை சமாதானம் செய்து சென்னைக்கே சென்றுவிடும்படி கூறியுள்ளார். ஆனால் நதியா செல்ல மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கு இடையே நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், கள்ளக்காதலி நதியாவின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளார்.நீண்ட நேரமாக சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மலைக்குன்றுக்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்த தங்கராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். நதியா சடலமாக கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நதியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலம் அருகே இருந்த பையில் நதியாவின் ஆதார் அட்டை இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு நதியா கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் கொடுத்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த தங்கராஜை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்