பேரையூர் அருகே கனமழைக்கு 6 ஏக்கர் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை

 

பேரையூர், மே 8: பேரையூர் அருகே காற்றுடன் பெய்த கனமழைக்கு 6 ஏக்கருக்கு மேல் வாழைகள் ஒடிந்து சேதமானதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். பேரையூர் அருகே சந்தையூர், எஸ்.மேலப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் சந்தையூர் காசிமாயன், தேன்சாமி, செல்லையா, எஸ்.கீழப்பட்டி மணிகண்டன், கருப்பசாமி உள்ளிட்ட விவசாயிகளின் வாழைகள் சுமார் 6 ஏக்கருக்கு மேல் காற்று மழைக்கு ஒடிந்து சாய்ந்தன.

இதனால் அறுவடை பருவத்திலிருந்த வாழை குழைகள் அனைத்தும் காய், பிஞ்சுகளாக வீணாகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டக்கலை அலுவலர் ஜெயக்குமார், விஏஓ விஜயக்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்