பேரையூரில் புறக்காவல் நிலையம்

மன்னார்குடி, ஆக.22: மன்னார்குடி அடுத்த வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட பேரையூரில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கையாக புறக்காவல் நிலையம் ஒன்றை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் பேரையூரில் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த புறக்காவல்
நிலையத்தை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கவியரசு, பரவை முத்துவேல், சித்தேரி சிவா, ஆனந்த், மாவட்ட பிரநிதி நல்லிக்கோட்டை கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடுவூர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்ஐ பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை