பேரையூரில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலம்: பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பேரையூர், ஏப். 11: பேரையூரில் அமைந்துள்ள சுயம்பு பத்திர காளியம்மன், மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் அம்மன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தவழ்ந்ேதாடும் பிள்ளை, கால் பாதம், கை பாதம், கண் மலர் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை முதல் தீச்சட்டி, 21 தீச்சட்டி, கரும்பில் பிள்ளை தொட்டில் எடுத்தல், உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து மாலையில் வாய், உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுயம்பு பத்திரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூசாரி அருள்வாக்கு வழங்கி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் பேரையூர்- உசிலம்பட்டி சாலை அருந்ததியர் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், சாமி உருவங்களுடன் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்