பேரூர் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க நால்வர் இசைத்தமிழ் ஆராதனை

 

தொண்டாமுத்தூர், ஆக. 28: கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா நேற்று நடந்தது. உலக மக்கள் நலன் கருதியும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நல்ல முறையில் விரைவில் நடைபெறவும் பன்னீர் திருமுறை பாராயணம் பன் இசையோடு துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வர் பேருக்கு அபிஷேகம் தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. கனக சபை முன்பு கொங்கு மண்டல ஓதுவார் மூர்த்திகள் சேர்ந்திசையான நால்வர் இசைத்தமிழ் ஆராதனை தொடர்ந்து நால்வர் மக்களோடு திருமுறை கோயில் திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவியாளர் விமலா, மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா தண்டபாணி ஆகியோர் செய்து இருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு