பேருந்து படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம்: எச்சரித்து அனுப்பிய டிஎஸ்பி

பட்டிவீரன்பட்டி: பேருந்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்களை டிஎஸ்பி எச்சரித்து அனுப்பினார். திண்டுக்கல்லிருந்து தனியார் பேருந்து வத்தலக்குண்டு நோக்கி  சென்றது. அந்த பேருந்து சிங்காரக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நின்று, கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வத்தலக்குண்டுவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தனர். அப்போது அவ்வழியாக சென்ற நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமார் அந்த பேருந்தை லட்சுமிபுரம் டோல்கேட்டில் மறித்து, அந்த பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களிடம், தாய் தந்தையர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். நீங்கள் நல்லமுறையில் வீடு திரும்பினால் தான் அவர்கள் நிம்மதி அடைவார்கள். படியில் பயணம் செய்வது ஆபத்தானதாகும் என அறிவுரை வழங்கி மாணவர்களை இனிமேல் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என எச்சரித்து அனுப்பினார். மேலும் தனியார் பேருந்தின் ஓட்டுனர்,நடத்துனரிடம் இதுபோல் படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை