பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜன.9: சிவகங்கை அரண்மனைவாசல் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடமாவட்டங்களையும், கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களையும் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.29ஆயிரத்து 692கோடி நிதியை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணை செயலாளர் கோபால், முன்னாள் எம்எல்ஏ தங்கமணி பேசினர். நகர செயலாளர் மருது, ஒன்றிய செயலாளர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ராஜா, மாதர் சங்க அமைப்பாளர் குஞ்சரம்காசிநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை