பேரிகை 23 முத்தமிழ் விழா

ஆண்டிபட்டி, மே 11: ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பேரிகை 23 முத்தமிழ் விழா நேற்று நடைபெற்றது.‌‌ மருத்துவக் கல்வி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ் ஊர்வலம் பெண்கள் விடுதியிலிருந்து முளைப்பாரி எடுத்து விழா நடைபெறும் இடம் வரை கொண்டுவரப்பட்டது. அப்போது, மாணவ, மாணவிகள் சிலம்பாட்டமும், கோலாட்டமும் ஆடிச் சிறப்பித்தார்கள். இந்த விழாவில்‌ மருத்துவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கோலப்போட்டி, நாப்பிறழ் சொற்கள் போட்டி மற்றும் நாடக நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும், மாணவர்களின் இன்றைய வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா?” என்ற தலைப்பில் டாக்டர்.மீனாட்சி சுந்தரம் நடுவராக, மாணவர்கள் பங்கேற்க பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும், மாலையில் தென்னகப் பண்பாட்டு மையத்தின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவின் போது மருத்துவ கண்காணிப்பாளர், துணை முதல்வர், துணை கண்காணிப்பாளர், மாணவர் மன்ற ஆலோசகர், துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து‌ கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி