பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவுவிழா கொண்டாட்டமாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பேராசிரியரின் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளர்  பேராசிரியர் அன்பழகனின்  நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக-வினர் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் அவருடைய நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாட் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நலத்திட்டங்கள், பொதுமக்களிடையே பொதுக்கூட்டங்கள் நடத்துவது போன்ற தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் தொடக்கமாக அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியரின் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்ற உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் பேராசிரியர் அன்பழகனின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் பொதுவாழ்க்கை, முன்னாள் முதல்வர் கலைஞர் உடன் 75 ஆண்டு கால பயணம் வரையிலான அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை