பேரளி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

குன்னம், ஏப்.21: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேகா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர், உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் பௌஜியாபேஹம், அன்பரசி, மாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். நமது பள்ளி அரசுப் பள்ளி போன்ற விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது. எண்ணும் எழுத்தும் செயல்பாட்டினையும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணி அனைத்து தெருக்களின் வழியாகவும் சென்று இறுதியில் பள்ளியை அடைந்தது. முடிவில் பள்ளி ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா