பேரறிவாளனை போல விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் மனுதாக்கல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த மே 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட சட்டப்பிரிவு 142வது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.இந்த வழக்கில் சிறையில் இருக்கும் மீதமுள்ள 6 குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த செல்வன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ரவிச்சந்திரன் சிறை நன்னடத்தையுடன் இருக்கிறார். மேலும் அவர் சிறையில் உழைத்து சம்பத்தித்த ஊதியம் அனைத்தையும் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக வழங்கியுள்ளார். எனவே இவர் சமுதாய அக்கறை கொண்ட மனிதர் என்பது தெளிவாக தெரியவருகிறது. அதனால் ரவிச்சந்திரன் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் எந்தவித தீங்கும் ஏற்படாது. அதனால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் ரவிச்சந்திரனையும் விடுதலை செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்….

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு