பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ஜோலார்பேட்டை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த ஆண்டு மே 28ம் தேதி முதல் பரோலில் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், தருமபுரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவ்வப்போது பரோலை நீட்டித்து வந்தது. இந்நிலையில் நேற்றுடன் பரோல் முடிந்து இன்று பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்தனர். இதற்கிடையே அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது….

Related posts

“ஒருவருடம் காத்திருந்து ரெக்கி ஆபரேஷன்’’ 5 முறை முயற்சி தோல்வியில் முடிந்தது: 6 வது ஸ்கெட்சில் தீர்த்து கட்டினோம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் தகவல்கள் அம்பலம்

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு