பேரணாம்பட்டு அருகே காரில் வந்தவர்களிடம் ₹75 ஆயிரம் பறிமுதல்

குடியாத்தம், ஏப்.15: பேரணாம்பட்டு அருகே காரில் வந்தவர்களிடம் ₹75
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி உத்தரவின்படி குடியாத்தம் சட்டமன்ற(தனி) தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சுபானந்தாராஜ் தலைமையில், தலைமை காவலர் சுமதி, போலீஸ்காரர் குமார் ஆகியோர் நேற்று பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பள்ளியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் வந்தவர்களிடம் ₹75 ஆயிரத்து 300 இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த பணத்தை தாசில்தார் சித்ராதேவி, குடியாத்தம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி