பேய்க்குளம் சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம். ஜூலை 22: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்மாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று (21ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஜூலை 31ம் தேதி வரை 11 நாள்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து கொடியேற்றம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 28ம் தேதி வரை தினமும் சுற்று வட்டார கிராம மக்கள் சார்பில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. 10ம் நாளான 30ம் தேதி மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30அன்னதானம் நடக்கிறது. 11ம் நாளான ஜூலை 31ம் தேதி காலை 5மணிக்கு கணபதி ஹோமம், 7மணிக்கு அபிஷேகம், 8மணிக்கு அலங்கார பூஜை, காலை 9மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், 12.30 மணிக்கு அன்னதானம் உள்ளிட்டவை நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 5மணிக்கு சீர் வரிசையுடன் அம்பாளை அழைக்க செல்லுதல், இரவு 7மணிக்கு தபசுக்காட்சி நடக்கிறது. இரவு 8மணிக்கு அன்னதானம், 9.30மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், இரவு 10மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் நகர் வலம் வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு