பேனா, பென்சில், ஸ்கூல் பேக் வாங்க குவிந்த பெற்றோர்

 

பெரம்பலூர், ஜூன் 12: இன் று (12ம்தேதி) உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் பென்சில், பேனா ஸ்கூல் பேக்குகளை, தைத்த சீருடைகளை வாங்கக் குவிந்த பெற்றோர் பெ ரம்பலூர் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது கோடை வெப்பத்தின் தாக் கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் வெப்பக் காற்று வீசி வந்தது. இதன் காரணமாக வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத் தில் திறக்கப்படும் பள்ளி கள், ஜூன்மதத்தின் இர ண்டாவது வாரத்தில் திறப் பதற்கு நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் பேரில், 2023 -2024 ம் கல்வி ஆண்டிற்கு 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி கள் இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. வருகிற 14-ம் தேதி 1 முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளி கள் திறக்கப்பட உள்ளது. இதைமுன்னிட்டு பெரம்ப லூர் சுற்றுவட்டார கிராம ங்களைச்சேர்ந்த பெற்றோ ர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான பேனா, பென்சில் ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக், வாட் டர் பாட்டில் உள்ளிட்ட தேவையான உபகரணங்க ளை வாங்க கடைவீதியில் குவிந்திருந்தனர். குறிப் பாக பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை, என்எஸ்பி ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, பெரிய கடைவீதி, காமராஜ் வளைவு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோர்கள் மாணவ மா ணவியரின் கூட்டம் திரு விழா கடை போல் அலை மோதி இருந்தது.

மேலும் அரசு பள்ளிகள் ஆதி திராவிட நல பள்ளி கள் தவிர இதர சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந் துள்ள மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான பிரத்தியேக சீருடைகளை டைலர் கடைகளில் தைத்து அவற்றை வாங்கிச் செல்வ தில் ஆர்வம் காட்டினர். தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான தகரப் பெட்டிகள், சூட்கேசுகள் போ ன்றவற்றையும் பெற்றோர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் தீபாவளி, பொங்கல் பண்டிகை யின் போது புதுத் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவது போல் பெ ற்றோர்கள் மாணவ மாண வியரின் கூட்டம் பெரம்ப லூர் நகரில் அலைமோதி யது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை