பேச்சிப்பாறை அருகே பரபரப்பு சாலையோரம் கவிழ்ந்த டெம்போ: டிரைவர் படுகாயம்

குலசேகரம்: பேச்சிப்பாறை – கோதையாறு சாலை, பல ஆண்டுகளாக மிக மோசமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு கடும் இடையூறாக விளங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த அடமழை சாலையை மேலும் உருக்குலைத்தது. இந்த நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் கோதையாறு நீர்மின் நிலைய பணியாளர்கள் ேசர்ந்து, சில இடங்களில் சாலையை ஓரளவு சரிசெய்து, சிரமப்பட்டாவது வாகனங்களில் சென்றுவர ஏற்பாடு செய்தனர். இருப்பினும் சீரமைக்கப்படாத இந்த குண்டுகுழி சாலையில் செல்லும் வாகனங்கள் பலவும் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றன.இந்த நிலையில் நேற்று காலை கோதையாறில் இருந்து ஒரு டெம்போ ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு பேச்சிப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தது. மோசமான சாலை காரணமாக டெம்ேபா அசைந்தாடியபடியே வந்தது. டிரைவர் மிக சிரமத்துடன் அந்த வாகனத்தை ஓட்டி வந்தார். கோடமடக்கு பகுதியில் வந்தபோது, சாலை பள்ளங்களால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ெடம்போ சாலையோரம் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ேபாராடினார். அப்பகுதி வழியாக வந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள்  ஒன்று திரண்டு, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் டெம்போவை ஒருவழியாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்ைக விடுத்துள்ளனர்….

Related posts

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை