பேக்கரி மாஸ்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு

 

தேனி, மே 20: தேனி நகர் பங்களாமேடு 2வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் கும்பகோணம் குடைவாசலில் பேக்கரி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9ம் தேதி தேனி வந்து, குடும்பத்தினருடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு பங்கேற்றார். தொடர்ந்து கடந்த 11ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணத்திற்கு சென்றார்.

இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் தேனியில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் எடையுள்ள மோதிரம், தோடு, செயின், கம்மல், தங்ககாசுகள் மற்றும் ரூ.36 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து தேனி போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரிகின்றனர்.

Related posts

அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி

சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு