பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: ஓசூர் போலீசார் விசாரணை

ஓசூர்: நாடு முழுவதும் வருகிற 17ம் தேதி நீட்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர், பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்தவர் கோபி. தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி மோகனசுந்தரி. முரளி கிருஷ்ணா (18), கீர்த்திவாசன் என்ற இரு மகன்கள். இதில் முரளிகிருஷ்ணா கடந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதினார். மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் நீட் தேர்வு எழுத கடந்த ஓராண்டாக படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். நாடு முழுவதுமாக வருகிற 17ம்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முரளி கிருஷ்ணாவுக்கும் ஹால் டிக்கெட் வந்துள்ளது. அவர், ஆன்லைனில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற மன அழுத்தத்தில்  இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று திரும்பிய பெற்ேறார், வீட்டில் முரளி கிருஷ்ணா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினர். தகவலறிந்து ஓசூர் சிப்காட் போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது, முரளிகிருஷ்ணா தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் ‘எனக்கு நீட் தேர்வு கஷ்டமா இருக்கும்மா. என்னால நீட்ல நல்ல மார்க் எடுக்க முடியாது. என்ன மன்னிச்சிரும்மா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன். ஆனால் மெடிக்கல் சீட் வாங்குற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது. நான் இந்த முடிவ எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிரும்மா. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்ம்மா…’ என உருக்கமாக எழுதியுள்ளார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற பயத்தில் முரளி கிருஷ்ணா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்