பெருவிளையில் வரி வசூல் மையம் திறப்பு மாநகராட்சியில் ₹1.05 கோடியில் வளர்ச்சி பணிகள் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், டிச.12 : நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.05 கோடியில் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் 9 இடங்களில் வரி வசூல் மையங்கள் உள்ளன. இந்நிலையில், 4வது வார்டு பெருவிளையில் நேற்று காலை கணினி வரி வசூல் மையத்தை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி 47வது வார்டு ரகமத் கார்டன் குறுக்கு சாலைகளில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 41வது வார்டு மேலபுதுத்தெருவில் ரூ.5.40 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், 29வது வார்டு கணேசபுரம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சத்தில் தார்சாலை அமைத்தல், 22வது வார்டு நேரு தெருவில் ரூ.7 லட்சத்தில் தார் தளம் அமைத்தல், 7வது வார்டில் ரூ.2 லட்சத்தில் குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி மற்றும் சீதா லெட்சுமி தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை நேற்று காலை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகில வாணி, செல்வகுமார் கவுன்சிலர்கள் சேகர், அனிலா, மேரி ஜெனட் விஜிலா, ஜெனிதா, பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் ஷேக் மீரான், துரை, இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் மற்றும் வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு