பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சென்னை: வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி சென்னை வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த 31ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள், திருக்குளம், திருத்தேரை சுற்றி வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுடிருந்ததை அமைச்சர் கண்டறிந்தார். அதை உடனடியாக அகற்றுமாறு அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி நேற்று திருக்கோயில் முகப்பு, திருக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளும் மற்றும் திருத்தேரை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்