பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம்; தெலங்கானாவில் 100% முதல் டோஸ்: கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர்

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தில் தெலங்கானா மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது. தடுப்பூசியின் முதல் டோசை தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீத போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் தெரிவித்தார். இந்த சாதனையை சாதித்த தற்காக சுகாதார துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘தெலங்கானா மாநிலத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டது. பெரிய மாநிலங்களின் பட்டியலில் உள்ள தெலங்கானா மாநிலம் முதன்முறையாக சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி, கோவா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகள், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் இந்த சாதனையை படைத்துள்ளன.  மாநிலத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 66 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்’ என்றார்….

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்