பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் வரலாறு அறிய ஆங்கிலேயர்கள் ஆர்வம்

கூடலூர் : முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் குறித்து அறிந்து கொள்ள, அவரது சொந்த நாடான இங்கிலாந்தில் ஆங்கிலேயர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் சந்தான பீர் ஒலி. இவர், 2011ல் லண்டனில் மேற்படிப்பதற்காக சென்றபோது இங்கிலாந்தின் சர்ரே மாவட்டத்தில் கேம்பர்லி நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ள பென்னிகுக்கின் கல்லறையை கண்டு பிடித்தார். அவரது முயற்சியால் கடந்த 2017ல் பழமையான அந்தக் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. இது குறித்து அங்குள்ள நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பின்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது வம்சாவழிகள், லண்டன்வாழ் தமிழர்கள் மூலம் அங்குள்ள செய்ன்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் பென்னிகுக்கின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 15ல் பென்னிகுக் பிறந்தநாளில், பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்த இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பர்லி நகரில் அவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பென்னிகுக் பிறந்த ஊரில் சிலை நிறுவ கேம்பர்ளி மக்கள் பெரும் வரவேற்பும், ஆதரவும் அளித்து வருகிறார்கள். மேலும் பென்னிகுக் குறித்து அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் கேம்பர்ளி நகரில் உள்ள ஷர்ரே மியூசியத்தில் கர்னல் ஜான் பென்னிகுக் மற்றும் முல்லைப்பெரியாறு அணை குறித்த அருங்காட்சியகம் நடந்தது. அதைத்தொடர்த்து முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட முறையும், கர்னல் ஜான் பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாற்றையும் அறியும்பொருட்டு விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சர்ரே கீத் மியூசியம் ஜிலியன் ரைடீங் தலைமை வகித்தார். பென்னிகுக் வாழ்க்கை வரலாறு குறித்து ராயல் மேஜர் விவரித்தார். மேஜர் மேத்யூ அணை கட்டப்பட்ட முறை குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சந்தான பீர் ஒலி, ஷரோன் பில்லிங் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

Related posts

திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!!

சென்னையில் ஜூலை 7இல் மகளிருக்கான கார் பேரணி..!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்