பெரியாறு அணைக்குச் செல்ல அதிமுக ஆட்சியில் வாங்கிய படகு ‘தமிழ் அன்னை’ ஏரியில் 7 ஆண்டு தவம்: கமிஷனுக்காக ரூ.1.10 கோடி வீணடிப்பு என விவசாயிகள் புகார்

கூடலூர்: பெரியாறு அணைப்பகுதிக்கு அலுவல் பணிக்காக வரும் தமிழக அதிகாரிகள், தேக்கடி நீர்த்தேக்கத்தின் வழியாக அணைப்பகுதிக்கு கண்ணகி மற்றும் ஜலரத்னா 2 படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த இரு படகுகளை மாற்றி ரூ. 1.10 கோடி செலவில் புதிய படகு வாங்க கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் முடிவு செய்தனர். முதற்கட்டமாக கொச்சியில் வடிவமைக்கப்பட்ட 27 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 200 எச்பி இரட்டை இன்ஜின் கொண்ட ‘‘தமிழ் அன்னை’’ ஸ்டீல் படகு 2014ல் தேக்கடி படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. பெரியாறு அணையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 2 படகுகளும், 27 எச்பி திறன் கொண்டது. இதனால் 200 எச்பி திறன் கொண்ட தமிழன்னை படகை இயக்க கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் 7 ஆண்டுகளாக இந்த படகை இயக்க தமிழக பொதுப்பணித்துறையினரால் அனுமதி பெற முடியவில்லை. தேக்கடி ஏரியில் அதிக இழுவைத் திறன் கொண்ட படகு இயக்க கேரள அனுமதி கிடைக்காது எனத் தெரிந்தும் கமிஷனுக்காகவே அதிகாரிகள் அதிக திறன் கொண்ட படகை வாங்கி உள்ளனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஐந்து மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘கேரள அரசு அனுமதி தராது எனத் தெரிந்தும், அதிமுக ஆட்சியில் பல லட்சம் ரூபாய் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே செய்த தவறு இது. இந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து