பெரியமேடு பகுதியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: ஒடிசா வாலிபர் கைது

சென்னை: பெரியமேடு பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பெரியமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், பணம் எடுப்பது போல் நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியவில்லை. அதேநேரம் ஏடிஎம் மையத்தின் அபாய ஒலி கேட்டதும் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின்படி பெரியமேடு போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியில் தங்கி பணியாற்றி வரும் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பஹரம்தூர் பகுதியை சேர்ந்த கதிர் (33) என்பவர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர் மீது ஐபிசி 380, 457, 511 ஆகிய பிரிவுகளின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து புகைப்படம் ஆதாரத்தை வைத்து நேற்று சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து போலீசார் கதிரை கைது செய்தனர்….

Related posts

14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது