பெரியபாளையம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை: சீரமைக்க கோரிக்கை

 

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணியில் பழுதடைந்து காணப்படும் கால்நடை மருத்துவமனை சீரமைத்து அதன் முன்பு வளர்ந்துள்ள அடர்ந்த புதர் மண்டிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆரணி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளானர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆரணி பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசு கால்நடை மருத்துவமனை 2012ம் ஆண்டு ரூ.26.66,000 மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு ஆரணி மற்றும் சுற்றி உள்ள மல்லியங்குப்பம், மங்கலம்,புதுப்பாளையம், என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், கோழி, பசுமாடு, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை நோய் தாக்கினால் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். இதனையடுத்து இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தின் ஜன்னல்கள் ஆங்காங்கு உடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் கட்டிடத்திற்கு முன்பு பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிமெண்ட் ஷீட் ஷெட் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செட்டின் மேல் ஓடுகள் உடைந்துள்ளன.

மேலும் மருத்துவமனையைச்சுற்றிலும் அடர்ந்த முட்புதர் வளர்ந்துள்ளன. இதனால் பாம்பு, பல்லி தேள் போன்ற விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறிவருகிறது. மேலும் மருத்துவமனைக்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் கதவு இல்லை. இதனால் அப்பகுதி குடிமகன்கள் உள்ளே நுழைந்து மது அருந்திவிட்டு கண்டபடி பாட்டில்கள் மற்றும் உணவுக் கழிவுகளை விட்டுச் செல்கின்றனர். எனவே பழுதடைந்த கால்நடை மருத்துவமனையை சீரமைத்து உடைந்த சிமெண்ட் ஓடுகளை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்