பெரியபாளையம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார்

 

பெரியபாளையம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடமதுரை ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், துணை அமைப்பாளர் விஜயபிரசாத், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்புன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு வடமதுரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ் நன்றி கூறினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை