பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு

பெரியகுளம், ஜூலை 25: பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பாவை பாடப்பட்டு துளசி பூஜை நடைபெற்றது. இங்கு ஒரே நேரத்தில் 108 துளசி செடிகளுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அர்ச்சனை செய்து 108 நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் தரப்பில் மதுரகீதம் பஜனை, மாதுரி சமேத பிரேமிக வரத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணன், லட்சுமி மற்றும் குருஜி அஸ்டோத்திரம் பாடப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இதன்பிறகு உலக நன்மை வேண்டி பிரார்த்தனையில் பங்கேற்றோர்
கூட்டு பிரார்த்தனை செய்தனர். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு துளசி தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை