பெரியகுளத்தில் ‘உயர்வுக்கு படி’ உயர் கல்வி வழிகாட்டல் முகாம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி வளாகத்தில் நான் முதல்வன் உயர்வுக்கு படி எனும் உயர்கல்வி சிறப்பு வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. பெரியகுளம் சட்டமன்ற எம்எல்ஏ சரவணக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயண மூர்த்தி வரவேற்றார்.கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர் உயர் கல்வி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்வில், நான் முதல்வன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். பெரியகுளம் ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், கடமலை மயிலை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்வில், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் திருமலைசாமி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் மோகன் குமார்,ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் ஜேசுராணி, பெரியகுளம் வட்டாட்சியர் ஆர்த்தி (பொ), தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத் தலைவர் மலர்கொடி, பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் வித்யா ஆகியோர் பள்ளி மாணவ மாணவியருக்கு நான் முதல்வன் ‘‘உயர்வுக்குப் படி’’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக பயிற்சி அலுவலர் செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை