பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

பெரம்பலூர், நவ.29: பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் பெரம்பலூர் மாவட்டத் தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள, உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10 ஆம்தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே டிச-1 அன்று பிற் பகல் 5.45 மணி வரை வர வேற்கப்படுகின்றன. இதற் கான எழுத்து தேர்வு வருகிற டிச. 24 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ் நாடு கூட்டுறவு ஒன்றியத் தால் நடத்தப்படும் கூட்டு றவு மேலாண்மை நிலை யங்களில் 2023-2024-ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டு றவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர் களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத் தியதற்கான ரசீதினை பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு இணைதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பபிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக் கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை. மேலும், இது தொடர்பான விரிவான விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbpblr.net < http://www.drbpblr.net/ > வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண் ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை