பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் ஒகளூர் அரசு பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவில் தடகள போட்டி துவக்கம்

குன்னம், ஆக.14: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். தேசிய கொடியை லப்பைகுடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் கொடியை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்றி வைத்தார்.

போட்டிகளில் வேப்பூர் வட்டாரத்தில் உள்ள 14 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் 16 அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா பள்ளி, திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளி, மருதையான் கோவில் சரஸ்வதி பள்ளி உட்பட ஏழு தனியார் பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இளங்கோவன் தட்சிணாமூர்த்தி செந்தில்குமார் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் குடியரசு, ஆண்டாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, அகரம்சீகூர் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடி பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்