பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை இம்மாதம் முழுவதும் பெறலாம்

பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத் தின்கீழ் ஜூன் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டை தாரர்கள் ஜூலை மாதத் துவக்கத்திலிருந்து மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை, முதன்மைச் செயலாளரான ஆணையாளரால் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்று கொள்ளாத குடும்பஅட்டை தாரர்கள் சட்டசபை மானிய கோரிக்கையின் போது உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பிற்கு ஏற்ப ஜூலை மாதத் துவக்க த்திலிருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பெரம்ப லூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களு க்கு வழங்கப்படும் பாமா யில் மற்றும் துவரம்பருப்பு நகர்வு தாமதமானதை தொடர்ந்து ஜூன் 2024 மாதத்தில் பாமாயில் மற் றும் துவரம்பருப்பினை பெற்றுக் கொள்ளாத குடு ம்ப அட்டைதாரர்கள் கடை களில் இருப்பு பெறப்பட்ட வுடன் ஜூன் மாத்தத்திற்கு உண்டான பாமாயில் மற் றும் துவரம் பருப்பினை ஜூலை மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை