பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

 

பெரம்பலூர்,ஜன.19: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுக்கா, சிறுவாச்சூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா,

கை.களத்தூர் (கி) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, சு.ஆடுதுறை கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, நாரணமங்கலம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் மனோகரன் தலைமையி லும் நாளை 20ம்தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொது மக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளை தெரிவித்து, பயனடையலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை