பெரம்பலூர் கிருஷ்ணன் கோயிலில் குழந்தை கிருஷ்ணனுக்கு தொட்டில் சேவை

பெரம்பலூர்,செப்.7: பெரம்பலூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கிருஷ்ணனுக்கு தொட்டில் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் சுற்றியமர்ந்து தாலாட்டுப் பாடல் பாடினர். பெரம்பலூர் நகரில் அருள் பாலித்து வரும் கிருஷ்ணன் கோவிலில் நேற்று (6ம் தேதி ) மாலை 6:30 மணியளவில் கோகுலாஷ்டமி விழாவை (கிருஷ்ண ஜெயந்தி) முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ணனான குழந்தை கிருஷ்ணனின் தொட்டில் சேவை வெகு சிறப்பாக, உற்சாகமாக நடைபெற்றது.

விழாவில் பெரம்ப லூர் நகரத்தைச் சேர்ந்த குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதா வேடங்களில் தொட்டில் அருகே அமர்ந்து தாலாட்டு பாடி வழிபட்டனர். இதில் பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, எளம் பலூர் பகுதிகளைச் சேர்ந்த திரளான கிருஷ்ண பக்தர் கள், பொதுமக்கள், விழா உபயதாரர்கள், நகர யாதவர் சங்கத்தினர் நிகழ் ச்சியில் திரளாகக் கலந்து கொண்டு கிருஷ்ணனை வழிபட்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்